search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர்"

    சேலத்தில் பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    சேலம்:

    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    போராட்டத்தை தூண்டியதாக நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியுஸ் மானூஸ், வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே சேலம்-சென்னை பசுமை வழிசாலை திட்டத்தை செயல்படுத்தினால் 16 பேரை கொல்வேன் என்ற கருத்தை ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் என்பவர் சமூக வலை தளங்களில் வெளியிட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் வசீகரன் மீது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக மக்களை தூண்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக காரிப்பட்டி தனிப்படை போலீசார் சென்னை மதுரவாயல் சீனிவாசாநகரில் இருந்த ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரனை கைது செய்து சேலத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் வாழப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி சந்தோசம் அவரை வரும் 18-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே சேலம் பாரப்பட்டி பகுதியில் நில உள் அளவீடு பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 3-ந் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 16 விவசாயிகளை போலீசார் தரதரவென இழுத்து சென்றனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று நில உள் அளவீடு பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 26), மாணிக்கம் (37) ஆகிய 2 பேர் அங்குள்ள கிணற்றில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    பின்னர் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். விடுவிக்கப்பட்ட அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் பூலாவாரி பகுதியில் நில உள் அளவீடு மற்றும் மரங்கள் கணக்கீடு பணிகள் 3-வது நாளாக இன்றும் நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் நிலவி வருகிறது.

    ×